சென்சார் அதிகாரிகளை பார்த்து பயப்பட வேண்டாம். கமல்

kamalதனது ஐம்பது ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் கமல் பல நேரங்களில் துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டுள்ளார். அவற்றில் ஒன்றாக சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் சென்சார் அதிகாரிகளை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை என்று துணிச்சலுடன் கூறியுள்ளார்.

சென்னையில் அசோக் கே.பாங்கர் என்பவர் எழுதிய புத்தகம் ஒன்றை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன், ‘திரையுலகை சேர்ந்த பலர் சென்சார் அதிகாரிகளை கண்டு பயந்து நடுங்கியதை தான் நேரடியாக பார்த்திருப்பதாகவும், சென்சார் அதிகாரிகளை கண்டு திரையுலகினர் பயப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கலைஞன் என்ற வகையில் என் படத்திற்கு என்ன தேவையோ அதை எடுக்க எனக்கு முழு உரிமை உள்ளது. எனது வேலையை நான் செய்கிறேன். சென்சார் அதிகாரிகள் அவர்களது வேலையை செய்கின்றார்கள். இதில் ஒருவருக்கொருவர் பயப்பட என்ன இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

Leave a Reply