முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு புகாருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு பணி நீடிப்பு வழங்க, தமிழகத்தின் ஒரு முக்கிய கட்சி கடும் நெருக்கடி கொடுத்ததாக, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ குற்றம் சாட்டியிருந்தார்.
ரம்ஜானை முன்னிட்டு நேற்று இஃப்தார் நோன்பு விருந்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “‘ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டதில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜூ கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எவ்வித ஆதாரமும் இல்லாத ஒரு குற்றச்சாட்டுக்கு முன்னாள் பிரதமர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். மேலும், இந்த விவகாரத்தில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் தேவையற்ற கருத்து தெரிவித்துள்ளார் என்று மேலும் கூறினார்.