8 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஹவாய் மீடியாபேட் எம் 2 டேப்லெட்

TamilDailyNews_5551983118058

ஹவாய் நிறுவனம் பிரான்சில் புதிய மீடியாபேட் எம் 2 டேப்லெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லட்டில் EUR 349 (சுமார் ரூ.25,000) விலையில் அறிவித்துள்ளது மற்றும் ஜுன் மாத தொடக்கத்தில் கடைகளில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துரதஷ்டவசமாகபிரான்சின் வெளிப்புறத்தில் அறிவிப்பது பற்றிய விவரங்கள் எதுவும் நிறுவனம் குறிப்பிடப்படவில்லை.

ஹவாய் மார்ச் மாத தொடக்கில் அறிவித்த மீடியாபேட் எக்ஸ் 2 டேப்லட்டை போலவே மீடியாபேட் எம் 2 டேப்லெட்டில் ஒரே மாதிரியான குறிப்புகள் கொண்டுள்ளது. ஹவாய் மீடியாபேட் எம் 2 டேப்லெட்டில் நிறுவனத்தின் சொந்தமான எமோசன் UI 3.0 ஸ்கின் கொண்ட ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது. இந்த டேப்லெட்டில் 1200×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 8 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் மாலிT628 ஜிபியூ மற்றும் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 64பிட் 2GHz ஹய் சிலிக்கான் கிரின் 930 அக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

ஹவாய் மீடியாபேட் எம் 2 டேப்லெட்டில் மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய (குறிப்பிடப்படாத அதிகபட்ச கொள்ளளவு) 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இந்த டேப்லெட்டில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இதில் 4800mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

ஸ்மர்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத், FM ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிஎஸ்எம் மற்றும் 3ஜி போன்றவற்றை வழங்குகிறது. மேலும் இதில்ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், அம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

ஹவாய் மீடியாபேட் எம் 2 டேப்லெட் அம்சங்கள்:

  • 1200×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 8 இன்ச் டிஸ்ப்ளே,
  • 2ஜிபி ரேம்,
  • 2GHz ஹய் சிலிக்கான் கிரின் 930 அக்டா கோர் ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • Wi-Fi,
  • ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத்,
  • FM ரேடியோ,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ஜிஎஸ்எம்,
  • 3ஜி,
  • ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்,
  • 4800mAh பேட்டரி

 

Leave a Reply