தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவியின் உயிரை காப்பாற்றிய உயர்நீதிமன்ற நீதிபதி.

judgeஏரியில் விழுந்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண் ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஏரியில் குதித்து அதிரடியாககாப்பாற்றிய சம்பவம் ஒன்று சண்டிகரில் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாப்- ஹரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜியாபால் என்பவர், தனது பாதுகாப்பாளர் யஷ்பால் என்பவருடன் கடந்த 30ஆம் தேதி காலையில் தனது வீட்டு அருகே  நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் திடீரென ஏரியில் குதித்து உயிருக்கு போராடியவாறு தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டார்.

உடனடியாக தான் ஒரு நீதிபதி என்பதையும் பார்க்காமல் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏரியில் குதித்து தத்தளித்து கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அவருக்கு அவருடைய பாதுகாப்பாளரும் உதவி செய்தார். அதன் பின்னர் நீதிபதியும், அவரது பாதுகாப்பாளரும் அந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பெண் தற்கொலை செய்து கொள்ள முயன்றது குறித்து விசாரணை செய்த போலீஸார் வறுமை காரணமாக உயர்க்கல்வியை தொடர முடியாத வருத்தத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. இதனை அறிந்த நீதிபதி, மாணவியின் உயர் கல்விக்கு தேவையான பணம் அளித்து உதவி செய்ததோடு மாணவியை காப்பாற்ற தனக்கு உதவிய தனது மெய்க்காப்பாளர் யஷ்பாலுக்கு பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்து மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனது உயிரையும் பற்றி கவலைப்படாமல் நீதிபதி ஒருவர், ஏரியில் குதித்து மாணவியை காப்பாற்றிய சம்பவம் சண்டிகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply