ரிசர்வ் வங்கியின் ஏ.டி.எம் கட்டுப்பாடு. மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்.

atmஏ.டி.எம். இயந்திர பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தது தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு,  மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.களை மாதம் ஒன்றுக்கு 5 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்றும் மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன் கட்டுப்பாடு விதித்தது.  அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதற்கு நாடு முழுவதிலும் இருந்து வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒருசில தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாட்டை செயல்படுத்த மறுத்தன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஏ.டி.எம். பயன்பாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி இதுகுறித்து 2 வாரத்திற்கு பதிலளிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Leave a Reply