உள்ளாட்சி தேர்தல் தடை குறித்து ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த அறிவுறுத்தி இடைக்கால தீர்ப்பை அளித்தது
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது., இன்றைய விசாரணையின்போது மாநில தேர்தல் ஆணைய கூடுதல் மனுவுக்கு பதில் அளிக்க திமுக தரப்பு அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஐகோர்ட் விதித்த தடை மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்குதான் இந்த வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.