உணவில் அடிக்கடி குடைமிளகாய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

capsicum-350x250

சமீப காலமாக மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் ஓர் காய்கறியாக இருப்பது குடைமிளகாய். இது பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ணங்களில் கிடைக்கும். இருப்பினும் அதில் பச்சை வண்ண குடைமிளகாய் அதிக அளவில் கிடைப்பதோடு, அவற்றை சமைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதுமட்டுமின்றி, குடைமிளகாயில் வைட்டமின்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.

இதனால் இது பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும். அதிலும் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். சரி, இப்போது குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து இனிமேல் குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

குடைமிளகாயில் உள்ள கேப்சைனின் என்னும் உட்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். தற்போது புற்றுநோய்கள் மக்களை அமைதியாக இருந்து தாக்குவதால், இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வர, புற்றுநோய் தாக்காமல் தடுக்கலாம்.
 

குடைமிளகாய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரிகளை அதிக அளவில் எரிக்க உதவும். இப்படி கலோரிகள் அதிகமாக கரைந்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

குடைமிளகாய் வயிற்றில் உணவைச் செரிக்க உதவும் அமிலத்தின் அளவை அதிகரித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். ஆகவே செரிமான பிரச்சனை இருந்தால், இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் தாக்கும் இதய நோய் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை குடைமிளகாய் வழங்கும்.

இந்தியாவில் சர்க்கரை நோயினால் அவஸ்தைப்படுபவர்கள் ஏராளம். இதனைத் தடுக்க வேண்டுமானால், பச்சை மிளகாயை உணவில் அடிக்கடி சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இது சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கும்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால், மூட்டு தொடர்பான பிரச்சனைகளை ஏராளமான மக்கள் சந்தித்து வருகின்றனர். குடைமிளகாயை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், இப்பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

தலைமுடி பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், குடைமிளகாயை உட்கொண்டு வருவதோடு, அதன் சாற்றினைப் பயன்படுத்துவதும் நல்லது. இதனால் தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, தலைமுடியின் அடர்த்தியும் பராமரிக்கப்படும். ஆனால் இது எரிச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டதால், இதனைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Leave a Reply