ஆண்களுக்கு 30 வயது தொடக்கத்தில் ஏற்படும் உடல் பிரச்சனைகள்

e387b503-6cd8-4fae-ad54-df07d9211966_S_secvpf

நம்மில் 50% மேலானவர்கள் உட்கார்ந்த இடத்தில் கணினியின் முன்னே மணிக்கணக்கில் வேலை செய்து வருகிறோம். இதில் ஷிபிட் வேலைகள் வேறு, இவை ஒட்டுமொத்தமாக நமது உடல்நலத்திற்கு ஆப்பு வைக்கும் செயல்கள் ஆகும். எனவே, முப்பது வயதை தாண்டும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்..

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் ஆண்களுக்கு முப்பது வயதை தாண்டும் போது எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். எனவே, தினமும் நடைபயிற்சி, மற்றும் போதிய அளவு உடலுக்கு வேலைகள் தர வேண்டியது அவசியம். உடற்பயிற்சி செய்யவில்லை எனிலும் யோகாவில் ஈடுபடுவது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. குடும்ப வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் ஆண்களுக்கு மனநிலையில் சமநிலையின்மை ஏற்படலாம்.

யோகா உங்கள் மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்த உதவும். பெரும்பாலும் ஆண்களுக்கு உடல் பருமன் அதிகரிப்பதே முப்பது வயதின் தொடக்கத்தில் தான். முப்பதுகளில் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், உங்கள் வாழ்நாள் கடைசி வரை நீரிழிவு, மாரடைப்பு போன்ற பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். உலக அளவில் 15 – 35 வயதுக்குள்ளான ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உடனே சரி செய்துவிட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். விதைப்பை வலி, கடினமாக உணர்வது, மார்பு வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள் என கூறப்படுகிறது. ஆண்கள் தங்கள் உடல் வலிமை குறித்து அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக, உணவு தேர்வு, வேலையின் போது அவ்வப்போது சிறு ஓய்வு மற்றும் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடல் இலகுவாக இருக்க உதவும். உங்கள் உடலில் ஏதேனும் புதிய எதிர்மறை அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். மருத்துவரை ஏமாற்றுகிறேன் என்று, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.

Leave a Reply