பதின்ம பருவம் பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

6138c842-a69e-4c7d-977f-40a2d48b2c31_S_secvpf

பதின்ம வயதிலிருக்கும் பெண்களுக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் உதிர போக்கினால் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கீரை வகைகள், பேரிச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி அவர்களது உணவில் சேர்க்க வேண்டும்.

இந்த வயதில் உளுந்து சாப்பிடுவது மிக முக்கியம், ஏனென்றால் அது இடுப்பெலும்பை வலுப்படுத்தும். மாதவிலக்கின்போது உடலை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. அந்நாட்களில் இரு வேளை குளிக்க வேண்டும், அதில் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். நெருப்புக் குளியலும், சாம்பிராணியும் நல்லது.

* இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

* முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் பெண்கள் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

* மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

* மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

* இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். 

Leave a Reply