பெரிய தொப்பை இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவது நிச்சயம்

582067ce-f665-48ac-ace0-599396452b75_S_secvpf

தொப்பைக்கும் மாரடைப்புக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. யார் யாருக்கு எல்லாம் தொப்பையின் (Truncal Obesity) அளவு அதிகரித்துக் கொண்டு போகிறதோ அவர்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும். தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்களைக் கூறலாம்.

வயிற்றின் அடிப்பகுதியில் அதிக அளவு கொழுப்பு சேர்வதுதான் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. சிறிதளவு தொப்பை இருந்தாலே மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். உணவுப்பழக்கத்தாலும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளை அடிக்கடி அதிக அளவில் உட்கொள்வதால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கிறது. கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகளாலும் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொப்பை காரணமாக மாரடைப்பு உண்டாகி அதன்மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கண்டிப்பாக நம்முடைய உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது யோகாசனம், நடை மற்றும் ஓட்டப்பயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்றவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும்.

இத்தகைய உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியோடு நமது உடலை தொடர்ச்சியாக முழுப் பரிசோதனை செய்வதும் நல்லது. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றையும் தொடர்ந்து பரிசோதனை செய்து குறித்துக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட்டது.

25 பிளஸ்ஸில் இருப்போருக்கும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. பணி மற்றும் குடும்பச் சூழலால் ஏற்படும் மனஅழுத்தம் போன்றவையே முக்கிய காரணம். குண்டாக இருப்பவர்களுக்குத் தொப்பை காரணமாக மாரடைப்பு உட்பட என்னென்ன பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றதோ அத்தகைய பாதிப்புகள் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களாக இருந்தும் தொப்பை அதிகமாக உள்ளவர்களுக்கு ஏற்படும். 

Leave a Reply