தென்கொரிய கப்பல் மூழ்கும் முன் எடுக்கப்பட்ட வீடியோ.

   [carousel ids=”32985,32984,32983,32982,32981″]

100 பள்ளிக்குழந்தைகள் உள்பட 300 பேர் வரை பலிகொண்ட தென்கொரிய பயணிகள் கப்பலில் இருந்து இன்று காலை ஒரு செல்போனை மீட்புக்குழுவினர் எடுத்தனர். அதில் பதிவாகி இருந்த ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1hjfw03″ standard=”http://www.youtube.com/v/XBOu88ffxuM?fs=1″ vars=”ytid=XBOu88ffxuM&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4571″ /] கப்பல் மூழ்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கப்பலில் பயணம் செய்த பள்ளிக்குழந்தைகள் அலறல் சத்தத்துடன் தங்கள் கடைசி குரலை வீடியோவில் பதிவு செய்திருந்தனர். நான் சாகப்போகிறேன் என்று ஒரு மாணவனும், எங்களை காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா? என்று ஒரு மாணவியும், மம்மி ஐ லவ் யூ என்று ஒரு மாணவனும், இந்த கப்பல் இன்னொரு டைட்டானிக் கப்பலா என்று ஒரு மாணவியும் கண்ணீருடன் கூறிய காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

இந்த வீடியோவை எடுத்த மாணவன், இது எங்களுடைய கடைசி ஞாபகர்த்தமாக இருக்கட்டும் என்று விடைபெற்று சென்ற காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்தவீடியோவை அந்த மாணவன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்ய முயற்சித்துள்ளான். ஆனால் இண்டர்நெட் வேலை செய்யாததால் ஃபேஸ்புக்கில் பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மீட்புக்குழுவினர் கைப்பற்றிய இந்த செல்போனின் வீடியோவை பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த வீடியோவை அவர்கள் விபத்து நடந்த அன்று காலை 8.52 மணி முதல் 9.09 வரை பதிவு செய்துள்ளனர்.

ferry2n-3-web

Leave a Reply