இந்தியாவில் இருக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் எவ்வளவு?

சுகாதார அமைச்சகத்தின் தகவல்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கும் அதன் மூலப்பொருட்களை பிரேசில் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் இந்த மாத்திரைகள் இந்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுமா? என்ற ஐயத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ளன.

இதற்கு சுகாதார அமைச்சகம் பதிலளித்தபோது, ‘இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன என்றும், நாட்டில் இதுவரை சமூக பரவல் இல்லை, பீதி அடையத் தேவையில்லை என்றும், ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது

மேலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இன்னும் அதிகளவு தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Leave a Reply