வெள்ளத்தில் 200 பேர் பலியானதை அடுத்து வெயிலால் 14 பேர் பலி: ஜப்பானுக்கு வந்த சோதனை
ஜப்பான் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 200-க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியான நிலையில், தற்போது அந்நாட்டில் கொளுத்தி வரும் கடும் வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
பொருளாதார முன்னேற்றத்தில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஜப்பான், இயற்கை பேரிடரை அடிக்கடி சந்தித்து வருகிறது சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் தங்கள் வீடு, உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து அந்நாட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது ஜப்பானின் பல்வேறு நகரங்களில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது