பஞ்சாங்கம் ஜெயித்தது. சென்னையில் கனமழை – வெள்ளம். பள்ளி, கல்லூரிகள் இன்றும் விடுமுறை

பஞ்சாங்கம் ஜெயித்தது. சென்னையில் கனமழை வெள்ளம். பள்ளி, கல்லூரிகள் இன்றும் விடுமுறை

floodபஞ்சாங்கத்தின்படி சென்னையில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. ஆனால் வானிலை அறிக்கையோ சென்னையில் படிப்படியாக மழை குறையும் என அறிவித்திருந்தது. ஆனால் வானிலை அறிக்கை பொய்த்து பஞ்சாங்கத்தின்படி நேற்று சென்னையில் மிகப்பெரிய மழை பெய்து சென்னையே கிட்டத்தட்ட மிதந்தது.

சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், அண்ணாசாலை, கே.கே.நகர், பூந்தமல்லி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது.

இந்நிலையில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையில் முக்கிய பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, தியாகராயநகர், நந்தனம், சைதாப்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கன மழை காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை, வேளச்சேரி, ரித்தர்டன் சாலை, எழும்பூர், சென்ட்ரல், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் 2 அடிக்கும் மேல் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், ஆங்காங்கே, ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் பழுதாகி நிற்கிறது. இதனால், அப்பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரசில் ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியை கடப்பதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இதனால், பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் மூன்று கார்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இதில் ஒரு காரில் இருந்த நான்கு பேர்களை அருகில் உள்ள பொதுமக்கள் காப்பாற்றியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Leave a Reply