இங்கிலாந்து நாட்டில் வரலாறு காணாத வகையில் பயங்கர மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. சாலைகளில் கார்கள் படகுபோல் மிதந்து வருகிறது. மேலும் கடுமையான பனிபொழிவு காரணமாக பல இடங்களில் சாலைகள் தடைபட்டு இருப்பதால் போக்குவரத்து அடியோடு பாதிப்படைந்துள்ளது. வானிலை காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் சில விமானங்கள் தாமதமாக கிளம்புகின்றன.
தேம்ஸ் நதிப்பகுதியில் பயங்கர வெள்ளம் ஓடிவருதால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு பலத்த காற்றுடன், மழை மற்றும் பனிப்பொழிவும் இருக்கும் என லண்டன் வானிலை அறிக்கை மையம் எச்சரித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகளை கவனிக்க மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ள மீட்பு பணிகளுக்காக எத்தனை மில்லியன் டாலர்கள் செலவானாலும் அதை அரசே ஏற்கும் என பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். வெள்ள நீரை வெளியேற்றும் அதிநவீன கருவி நெதர்லாந்து நாட்டில் இருந்து வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1ePhxoe” standard=”http://www.youtube.com/v/IO24B8zhZoo?fs=1″ vars=”ytid=IO24B8zhZoo&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep1299″ /]