தமிழகத்தில் தொடரும் கனமழை. 7 பேர் பலி. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இன்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகளும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது
காஞ்சிபுரத்தில் நேற்று சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது கனமழை மழையால், ஏரிகள் மற்றும் குளங்கள் நிறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி, நத்தப்பேட்டை ஏரி, செவிலிமேடு ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பியதாகவும், ஒருசில ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதாலும், வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளான மாமல்லன் நகர், பிள்ளையார்பாளையம், எம்எம் நகர், செவிலிமேடு, நாகாலத்துமேடு ஆகிய பகுதிகளில் சூழந்ததாலும், இப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றது. இந்த பகுதியில் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்புக் குழுவினர் உதவியுடன் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நீரில் மூழ்கியும், மரம் முறிந்து விழுந்தது போன்ற பல்வேறு நிகழ்வுகளில் 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary: Heavy rain brought life to a grinding halt across Tamil Nadu on Friday and a day’s holiday …
[carousel ids=”75817,75816,75815,75819,75818,75820,75821,75822″]