30 மாவட்டங்களில் இன்று இரவு மழை: வானிலை அறிக்கை
தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அடுத்த சில மணி நேரங்களில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சென்னையை பொருத்தவரை நகரின் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்று கூறப்படுகிறது