சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை!

சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புறத்தில் நேற்று விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததை அடுத்து சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது

ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்யும் என்று கூறியிருந்தது

அதன்படி நேற்று சென்னை தேனாம்பேட்டை, அண்ணாசாலை, சைதாப்பேட்டை, தி நகர் ,மயிலாப்பூர், எழும்பூர் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது

இதனால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்