கர்காடகாவில் கனமழை: தமிழகத்திற்கு இப்போதாவது தண்ணீர் கிடைக்குமா?

கர்காடகாவில் கனமழை: தமிழகத்திற்கு இப்போதாவது தண்ணீர் கிடைக்குமா?

கர்நாடகாவில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அம்மாநிலத்தின் குடகு மாவட்டம் உள்பட காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்பட்சத்தில், தமிழகத்திற்கும் நீர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், தமிழகத்திற்கு நீர் திறந்துவிடும்படி, தொடர்ந்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனாலும், போதிய நீர் இல்லை எனக் கூறி கர்நாடகா விடாப்படியாக, தமிழகத்திற்கு நீர்விட மறுப்பு தெரிவிக்கிறது. இந்த முறை கனமழை பெய்து, காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், கர்நாடகா அரசு என்ன செய்யப் போகிறது என்று, தமிழக விவசாயிகள், அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply