திருப்பதியில் வரலாறு காணாத மழை. பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவிப்பு

திருப்பதியில் வரலாறு காணாத மழை. பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவிப்பு
tirupati
திருப்பதி திருமலையில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் ஏழுமலையானை தரிசிக்க சென்ற பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. கனமழை காரணமாக திருப்பதி மலைப்பாதையின் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலையின் 2-வது மலை பாதையில் நேற்று மண் சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் அவ்வப்போது உருண்டு விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி 2-வது மலை பாதை சில கிலோ மீட்டர் தூரம் மூடப்பட்டு, போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.

பக்தர்கள் நடந்து செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையிலும் அடிக்கடி பாறைகள் உருண்டு விழுந்ததால் அந்த பாதையும் மூடப்பட்டது. மீட்புக்குழுவினர் விரைந்து சீரமைப்பு பணிகளை முடிந்ததை அடுத்து, திருப்பதி மலை நடைபாதையில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பதி உள்பட ஆந்திராவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், திருப்பதி ஏழுமலையான கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply