ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் போட்டி
தற்போது ஐ.நாவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் பான் கி மூன் அவர்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைவதை அடுத்து புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் ஹெலன் கிளார்க் போட்டிட முடிவு செய்துள்ளார். இவரையும் சேர்த்து மொத்தம் 3 பெண்கள் இந்த பதவிக்கு போட்டியிடுகின்றனர். மேலும் ஏற்கனவே 4 ஆண்கள் களத்தில் உள்ளதால் மொத்த பொட்டியாளர்களின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கூறியதாவது: “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் தேவை. அதில் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக அங்கம் வகிக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த 2 நாடுகள் நிரந்தர உறுப்பினராகும்’ என்று கூறினார். 30 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள ஹெலனுக்கு தற்போதைய நியூசிலாந்து பிரதமர் ஜான் கே ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது ஐ.நா. வளர்ச்சி திட்ட குழுவின் தலைவராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஐ.நா. பொதுச்செயலாளராக பணியாற்றிய அனைவரும் ஆண்களாகவே இருந்த நிலையில் இம்முறை ஐ.நா. பொதுச்செயலாளராக ஒரு பெண் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெலனை தவிர யுனெஸ்கோ தலைவர் இரினா போசோவா (பல்கேரியா), அகதிகளுக்கான உயர்மட்ட குழு முன்னாள் கமிஷனர் அன்டோனியோ கட்டர்ஸ் (போர்ச்சுக்கல்) ஆகிய பெண் போட்டியாளர்களும் களத்தில் உள்ளனர்.
Chennai Today News: Helen Clark, former New Zealand PM, enters race for UN secretary general