தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு விரைவாக சென்றடைய ஹெலிகாப்டர் சேவை தொடங்குவது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் கடந்த சில நாட்களாக ஆலோசித்து வந்தது. இதன் முதல் கட்டமாக மத்திய அரசு நிறுவனமான பவன் ஹான்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், செயலாளர் கண்ணன், சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் ஆணையாளர் ஹர்சகாய் மீனா, ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாக கருதப்படும் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், சென்னை, மகாபலிபுரம், புதுச்சேரி, திருப்பதி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கலாம் என இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எனினும் முதல்கட்டமாக மதுரை – ராமநாதபுரம், மதுரை-கன்னியாகுமாரி ஆகிய இரண்டு இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கலாம் என்றும் இதற்கு சுற்றுலா பயணிகளிடம் இருந்து வரும் ஆதரவை பொறுத்து பிற பகுதிகளுக்கு இந்த சேவையை தொடரலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது