எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு உதவும் தொப்புள்கொடி

5d953a84-e161-443c-b583-3d4d7a0365fc_S_secvpf

சிசுவின் ஜனனம் என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். ஆனால் அதே நேரம் கருவுற்ற பெண்ணை “பத்திரமாக” இருக்கச் சொல்கிறோம். கரு “நிலைக்க / தங்க” வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கிறோம். சில குடும்பங்களில் இதற்காக தனிப்பட்ட பிராத்தனைக் கூட செய்வதுண்டு. முதல் 3 மாதங்கள் கருவை 200% கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கரு முழுமையான சிசுவாக உருவாக தேவையான cells தயாராகிறது. இதை stem cells என்று சொல்வார்கள்.

* கருவின் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்குவது இந்த stem cells தான்.

* இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கை, கால், கண், நாடி, நரம்பு என்று எல்லாமே இந்த Stem cell இல் இருந்து specialise ஆகி உருவானது தான். இப்படி “நாம்” உருவாக காரணமாய் இருக்கும் stem cells இன்னமும் நம் உடம்பில் எலும்பு ஊனில் (Bone Marrow) உற்பத்தியாகிறது. அதனால் தான் சிறுகாயங்கள் தானாகவே “சரியாகிறது”. சில சமயங்களில் பலத்த அடி, எலும்பு முறிவு என்றால், தக்க மருத்துவ உதவியும், சரியான கவனிப்பும் இருந்தால், நாளடைவில் எலும்புகள் “ஒட்டிக்கொள்கிறது”.

* ஆனால் சில நேரங்களில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் பொழுது ஒருவருடைய உடம்பில் இருக்கும் Stem cells இன் அளவு பாதிப்பை சரி செய்ய போதுமானதாய் இருப்பதில்லை. இது மட்டும் இல்லை, நோய்வாய்பட்டவர் மருந்து – மாத்திரை சாப்பிடுவதால் உடம்பில் உள்ள அணுக்கள் பலவீனமாய் இருக்கும் சாத்தியமும் உண்டு. இம்மாதிரி நேரங்களில் சம்பந்தபட்டவருக்கு எலும்பு ஊன் மாற்றுச் சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை கூட வருவதுண்டு.

* எலும்பு ஊன் மாற்று சிகிச்சை செய்வது எளிதில்லை. இருவரின் தசைகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவேண்டும். இல்லையென்றால் நோயாளியின் உயிருக்கே உலை வைத்துவிடும். Donor இடமிருந்து எலும்பு ஊனை அறுவை சிகிச்சை மூலம் தான் எடுக்க வேண்டும் இப்படி எடுத்த எலும்பு ஊனை நோயாளியின் உடம்பில் செலுத்தும் பொழுது நோய்த்தொற்று (infection) வரும் சாத்தியம் உண்டு. லட்சத்தில் ஒரு பங்கு கவனம் சிதறினாலும் ஆபத்தானது.

* சரி, இதுக்கும் தொப்புள்கொடிக்கும் என்ன சம்பந்தம்?. கருவுற்ற பெண் நிறைமாதமானதும் நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தை பிறந்த உடன் தொப்புள்கொடியை அறுத்து பெற்றோர்களிடம் கொடுப்பார்கள். தொப்புள்கொடியிலிருந்து வரும் ரத்தத்தை சில ஆண்டுகள் வரை Medical waste / மருத்துவக் கழிவு என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பாருங்கள்.

* இதில் உயிரை உருவாக்கும் திறன் கொண்ட stem cells உள்ளது. இந்த குழம்பிலிருந்து தான் ஒவ்வொரு தசைகளுக்கென தனிபட்ட specialised cells உருவெடுக்கின்றன. ( இது இல்லையென்றால் கர்ப்பம் இல்லை)

* தொப்புள்கொடி ரத்தம் பிரசவத்தின் பொழுது மட்டுமே சேகரிக்க முடியும். இதை சரியான முறையில் Cryogeneic freeze in liquid nitrogen என்ற முறையில் பத்திரப்படுத்தினால் எவ்வளவு ஆண்டுகள் போனாலும் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். * இதற்கென எந்த விதமான பிரத்தியேக அறுவைசிகிச்சையும் தேவை இல்லை. பிரசவத்தின் பொழுது தாய்க்கும் சேய்க்கும் எந்த வித தீங்கும் வராமல் தொப்புள்கொடி ரத்தத்தை சேகரிக்கலாம்.  

* இம்மாதிரி சேகரித்து பாதுகாக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தம், Bone Marrow Donors கிடைக்காமல் தவிக்கும் Advance level நோயாளிகளுக்கு, குறிப்பாக Thalessemia, Diabetis, OestoeArthritis போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் சஞ்சீவனியாக திகழும்.

Leave a Reply