மூலநோய் காரணம்கார உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள். குறிப்பாக உணவில் அதிகளவில் மிளகு, மிளகாய், இஞ்சி போன்ற மசாலா வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு எல்லாம் மூலபாதிப்பானது வருவதற்கு வாய்ப்புள்ளது.
எப்பொழுதும் உட்கார்ந்த நிலையிலேயே பணிபுரிபவர்களுக்கு வரலாம்,உடல் பருமனானவர்களுக்கு வரலாம்,உஷ்ணமான உணவுகள், அசைவ உணவுவகைகள், அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
உடம்பிற்கு போதுமான அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கமற்றவர்கள்.கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவினை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள். நார்சத்து உள்ள காய்கள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள்,உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அற்றவர்களுக்கு மலச் சிக்கல் ஏற்படும்.
மலச்சிக்கலால் மலக்குடல் சுருங்கி அதில் வீக்கம் ஏற்பட்டு மலம் இறுகி அதனால் புண், அரிப்பு ஏற்படும். மூல நோய்க்கு முதல் காரணமே மலச்சிக்கல்தான். உடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச் சிக்கல்தான்.
உடல்உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவுகள், சிக்கன் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற்பட்டு விடும். நீங்கள் மூல நோயின் அறிகுறிகளை உணர்ந்தால் உட னே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள்.
- தேநீர் மற்றும் காப்பி அருந்துவதை முற்றிலும் தவிருங்கள்.
- வெளியே கடைகளில் சூடான மற்றும் குளிர் பானங்கள் குடிப்பதை தவிருங்கள்.
- உங்கள்உணவில் புளிப்பு சுவை பொருட்களை (புளி, எலுமிச்சை, ஊறுகாய், தக்காளி, தயிர், மோர், ஆரஞ்சு, எலுமிச்சை, வினிகர் முதலியன) பயன்படுத்த வேண்டாம்.
- அசைவ உணவு (முட்டை கூட) முழுமையாக சாப்பிட கூடாது.
- எந்த வடிவத்திலும் மிளகாய் சாப்பிடகூடாது (சிவப்பு, பச்சை, மிளகாய் தூள் மற்றும் பச்சை மிளகாய்) மற்றும் காரமான உணவு.வறுத்த மற்றும் எண்ணெய் உணவு சாப்பிடகூடாது. வேகவைத்த உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.
- குடிப்பழக்கம் தவிர்ப்பது மிகவும் நல்லது.புகையிலை, சுருட்டு, போதை பாக்குகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. கடினமான உடற்பயிற்சிகள் செய்ய கூடாது (அதாவது பளு தூக்கு தல் போன்றவை ), ஆனால் ஒரு முழுமையான படுக்கை ஓய்வு தேவை இல்லை.
- நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து கார் ஓட்டுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
- இரவுநேர வேலைசெய்வதையும் அதிக நேரம் இரவில் விழிதிருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருக்க கூடாது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடமாவது எழுந்து நடை பயிற்சி செய்ய வேண் டும்.
மூல நோய் வராமல் தடுக்க என்னென்ன பயன்படுத்த வேண்டும் (கண்டிப்பாக)
- தினமும் 5 முதல் 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- தினமும் முள்ளங்கி சாறு 50 மில்லி முதல் 100 மில்லி வரை 3 முறை குடிக்க வேண்டும்.
- முள்ளங்கி மற்றும் கேரட் கட்டாயமாக சாப்பிடுங்கள். உணவிலோ அல்லது பச்சையாகவோ. உணவுக் கஞ்சி மற்றும் சீரக தண்ணீரை தினமும் இரண்டு வேளை அருந்துங்கள். நார்சத்து நிறைந்த பழ மற்றும் உணவு வகைகளை அதிகம் சாப்பிடுங்கள் (பப்பாளி,தர்பூசணி, மாதுளை மற்றும் கொய்யா).