600 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பலை கண்டுபிடித்த இங்கிலாந்து கடற்படை
இங்கிலாந்து நாட்டில் 15ஆம் நூற்றாண்டில் மூழ்கிய போர்க்கப்பலின் ஒருசில பாகங்கள் 600 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வெற்றிகரமாக நவீன கருவிகளின் உதவியால் மீட்கப்பட்டது. இந்த கப்பலில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யும் பணிகளில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
இங்கிலாந்து நாட்டில் 15ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர் 5வது ஹென்ரி என்ற மன்னர் காலத்தில் ‘ஹோலி கோஸ்ட்’ என்று அழைக்கப்பட்ட பிரமாண்டமான போர்க் கப்பல் கடந்த 1415ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம்தேதி அரசு குடும்பத்தின் கப்பற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் கடந்த 1420ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பலத்த சேதம் அடைந்து, இங்கிலாந்தின் ஹெம் ஸ்ஷியர் பகுதயில் ஹாம்பிள் ஆற்றில் மூழ்கியது.
இந்த கப்பலை கண்டுபிடிக்கும் பணியில் இங்கிலாந்து பாரம்பரியம் பாதுகாப்பு அமைப்பு பல வருடங்களாக தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இங்கிலாந்து தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களின் உதவியோடு ‘சோனார்’ எனப்படும் நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகள் மூலம் அறியும் கருவி மற்றும் டிரோன் தொழில்நுட்ப கருவி உள்ளிட்டவை மூலம் இந்த கப்பலை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூழ்கிய போர்க் கப்பலின் சில உடைந்த பகுதிகளை இங்கிலாந்து கப்பல் படையினர் கண்டு பிடித்தனர். இக்கப்பல் மூழ்கி 600 ஆண்டுகள் ஆகின்றன. வரலாற்று சிறப்பு மிக்க இது நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்தது என வர்ணிக்கப்பட்டுள்ளது.
.