அம்மை நோய்க்கு மூலிகை மருந்து!

11205009_

கோடை வந்துவிட்டால் அம்மை, அக்கி, கண் நோய் போன்றவை வந்து சிலரை பாடாய்ப்படுத்திவிடும். எனவே, இத்தகைய காலகட்டத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

அம்மை நோய் யாருக்கேனும் வந்துவிட்டால் அது நம்மை தாக்காமல், காத்துக்கொள்ள கத்திரிக்காய் நல்லதொரு மருந்தாகும்.

முற்றின கத்திரிக்காயை தீயில் சுட்டு அதனுடன் தீயில் சுட்ட காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம், புளி, உப்பு ஆகியவற்றை நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நாம் உண்ணும் உணவோடு சேர்த்து சாப்பிட்டால் அம்மை நம்மை தாக்காது. அதையும் மீறி அம்மை வந்துவிட்டால் எளிதான ஒரு மருந்து இருக்கிறது. வேப்பங்கொழுந்தை அரைத்து எடுத்து சம அளவு அதிமதுரப்பொடி சேர்த்து தண்ணீர் விட்டு சுண்டைக்காய் அளவு சிறு சிறு உருண்டைகளாக்கி நிழலில் காயவைத்து, ஒன்றிரண்டு உருண்டை வீதம் தினமும் 3 வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், நோயின் தீவிரம் குறைந்து நோய் குணமாகும். மேலும் வேப்பிலை இளந்தளிருடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அம்மை கொப்புளங்களின் மீது தடவி வந்தால், நோய் விரைவில் குணமாகும்.

`மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் வந்தால் சோற்றுக்கற்றாழையின் சதைப் பகுதியை கண் இமைகளின்மேல் கட்டி வந்தால், நோயின் தீவிரம் குறைந்து குணம் கிடைக்கும். இதேபோல் சந்தனத்தை பன்னீரில் உரசி கண்களின்மேல் பூசி வந்தாலும் கண் நோய் குணமாகும்.

Leave a Reply