நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை: என்னடா நடக்குது நாட்டில்?
சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் தன்னுடைய வேட்புமனுவை முன்மொழிந்த தீபன் என்பவர் பேசிய வீடியோவை தனது டடுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இந்த ஜனநாயக கேலிக்கூத்தை மக்கள் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்ததால் மிரட்டப்பட்டதாக கூறப்படும் தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி முன் விளக்கமளித்ததாகவும், அதன் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணணயம் தரப்பில் கூறப்பட்டது. நேற்று அந்த வீடியோவும் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் வேட்புமனுவில் விஷாலை முன்மொழிந்து தாங்கள் கையொப்பமிடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வீடியோவின் ஒரு பகுதியை குறிப்பிட்டு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள விஷால், தன்னை முன்மொழிந்த தீபன், “நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை” என்று கூறுகிறார். அதில் அவர் நான் போட்ட கையெழுத்து என்று ஒப்புக் கொண்டு பின்னர் என்னுடையது இல்லை என மறுப்பதாக வார்த்தை பதிவாகியுள்ளது. இந்த கேலிக்கூத்தை மேற்கோள் காட்டிய விஷால், ‘இது மற்றொரு ஜனநாயக கேலிகூத்தாக இருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.
Here is another instance of mockery of Democracy !!!
The person accepting that the signature made by him is not his.
He said & I quote, "Naan Potta Kaiyeludhu Enododhu Illai"
In Tamil " நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை " pic.twitter.com/akr19GJ7Ls
— Vishal (@VishalKOfficial) December 8, 2017