பிளாட்பாரத்தில் கூறுபோட்டு விற்கப்படும் செல்போன்கள்
நாம் இதுவரை காய்கறிகள் மற்றும் பழங்களைத்தான் கூறுபோட்டு விற்பதை பார்த்திருக்கின்றோம். ஆனால் நமது அண்டை நாடான வங்கதேசத்தில் பிளாட்பாரத்தில் ரூ.100க்கும் குறைவாக மொபைல்போன்கள் கூறுபோட்டு விற்கப்படுகின்றன.
வங்கதேசத் தலைநகர் டாக்கா அருகே உள்ள மார்க்கெட் ஒன்றில் பிளாட்பாரத்தில் காய்கறி மார்க்கெட் போல, தரையில் மொபைல்போன்களை போட்டு விற்பனை செய்து வருகின்றனர். அதில் பெரும்பாலும் சீன மொபைல் போன்கள் தான் உள்ளன.
இந்த மார்க்கெட்டில் ரூ 84 முதல் ரூ.2000 வரை சாதாரண கீபேட் மொபைல் முதல் ஸ்மார்ட் போன்கள் வரை கிடைக்கின்றன. ஆனால் இதற்கு எந்த கியாரண்டியும் கிடையாது. பெரும்பாலும் இங்கு விற்கப்படும் மொபைல் போன்கள் திருடப்பட்டவையாகவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மொபைலாக இருக்கும். மேலும் இங்கு மொபைல் மட்டுமில்லாமல், சார்ஜர்,பேட்டரி, போன் கவர், ஹெட்போன் உள்ளிட்டவைகளும் கிடைக்கின்றன.