உடல் பருமன் பரம்பரை வியாதியா? ஆராய்ச்சி தகவல்

042915_obesity_BODY-350x250

இங்கிலாந்தின் இருபத்தைந்து சதவிகித மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சனை வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றிலும் தவறான உணவுப் பழக்கத்தாலும், முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பதாலும் உண்டாவதாக கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஹார்வர்ட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி. இணைந்து நடத்திய ஆய்வில் உடல்பருமன் ஒரு பரம்பரை பிரச்சனையாகவும் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

நமது டி.என்.ஏ.-வில் இருக்கும் ஒபிசிட்டி ஜீன் (FTO) நமது உடலில் உருவாகியுள்ள கொழுப்பை முறையாக உபயோகிக்கும் வேறு இரு ஜீன்களை தடுப்பதாக உடல்பருமன் கொண்ட பலரை பரிசோதித்ததில் தெரிய வந்துள்ளது.

இது மட்டுமின்றி, இப்படி கொழுப்பை கரைய விடாமல் தடுக்கும் டி.என்.ஏ.-வின் குறியீட்டை சற்றே மாற்றியமைத்தால் உடல்பருமனை தடுத்து, கொழுப்பு முறையாக கரைவதற்கான வழிவகை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்த ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. உடல் பருமனான எலி மீது சோதனை செய்ததில் இவ்வாறு நிரூபிக்கபபட்டுள்ளது.

இதுபோல டி.என்.ஏ. குறியீட்டை மாற்றியமைக்கும் முறைக்கு கிரிஸ்ப்ர்/கேஸ்9 (Crispr/Cas9) என பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம், வெறும் ஊசியால் குணப்படுத்தக் கூடிய பிரச்சனையாக உடல் பருமன் மாறும் வாய்ப்புள்ளது. இந்த ஆராய்ச்சி தற்போது மனிதர்கள் மீதும் முறையாக செயல்படுகிறதா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி கட்டுரை புது இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply