ஐ.எஸ். இயக்க தோன்ற காரணம் அமெரிக்கதான். லெபனான் இயக்கம் விளக்கம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கடந்த சில நாட்களாக ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் ஒபாமா என்றும் துணை தலைவர் ஹிலாரி கிளிண்டன் என்றும் குற்றம் சுமத்தி வரும் நிலையில் ஐ.எஸ். இயக்கம் தோன்ற காரணமே அமெரிக்காதான் என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.
லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா சமீபத்தில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இஸ்லாமிய தேச இயக்கம் உருவாகக் காரணம் அமெரிக்கா என்று அந்த நாட்டு அதிபர் தேர்தல் வேட்பாளரே கூறியிருக்கிறார். அவர் தக்க ஆவண ஆதாரங்களோடுதான் அதைத் தெரிவித்திருக்கிறார். மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக, புதிய இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவை அமெரிக்கா உருவாக்கியது என்று ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா கூறினார்.
ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகள் குறித்து அமெரிக்கா பின்பற்றிய தவறான வெளியுறவுக் கொள்கைகளால் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தோன்றிய டிரம்ப் பரிகாசமாக கூறியதாக பின்னர் மறுத்து கூறியபோதிலும் ஹிஸ்புல்லா இயக்கம் அவர் ஆதாரத்துடன் தான் கூறியதாக குறிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சிரியாவில் அதிபர் பஷார் அல்-அஸாதுக்கு ஆதரவாக சண்டையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.