பிரபல தையல் கடையின் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா? நடிகைகளும் சிக்கினார்களா?

tailoring shopடெல்லியில் உள்ள தையல் கடை ஒன்றில் மறைமுகமாக கேமரா வைத்து பெண்கள் உடைமாற்றுவதை ரகசியமாக விடியோ படம் பிடித்த தையல்கடை மேலாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி, லஜ்பத் நகரின் மையப்பகுதியில் பெண்களுக்கான பிரத்யேக தையல் கடை ஒன்று கடந்த சில வருடங்களாக பிரபலமாக இயங்கி வருகிறது. இந்த கடையில்தான் பிரபல நடிகைகள் மற்றும் வி.ஐ.பி பெண்கள் தைக்க தங்கள் துணிகளை கொடுப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கடைக்கு சமீபத்தில் வந்த பெண் ஒருவர், தான் தைப்பதற்காக கொடுத்திருந்த உடையை வாங்கி, அங்குள்ள உடை மாற்றும் அறையில் அணிந்து பார்த்திருக்கிறார். அப்போது, அந்த அறையில் உள்ள அலமாரியின் மையப்பகுதியில் ஒரு செல்போன் பொருத்தப்பட்டு இருந்ததையும் அந்த செல்போன் தான் உடைமாற்றுவதை படம் பிடித்திருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  

பின்னர் உடனடியாக சுதாரித்து கொண்ட அந்த பெண் அந்த அறையில் இருந்தே தனது செல்போனில் இருந்து காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், அந்த செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், அந்த செல்போன் தையல் கடையின் மேலாளருக்கு உரியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போனில் பதிவாகும் வீடியோக்களை அவர் பல இணையதளங்ளுக்கு விற்பனை செய்துள்ளாரா? என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவர் யார் யாரை இதுவரை வீடியோ எடுத்துள்ளார்? அவரது செல்போனில் பிரபலங்களின் வீடியோக்கள் இருக்கின்றதா? என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply