8ஆம் வகுப்பு படித்தவர் உயர்கல்வித்துறை அமைச்சரா? கர்நாடாகாவில் பொதுமக்கள் அதிருப்தி

8ஆம் வகுப்பு படித்தவர் உயர்கல்வித்துறை அமைச்சரா? கர்நாடாகாவில் பொதுமக்கள் அதிருப்தி

கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெறும் 38 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மஜத கட்சி இன்று ஆட்சி பொறுப்பில் உள்ளதை ஏற்கனவே பொதுமக்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவில் வெறும் 8 ஆம் வகுப்பு படித்த ஜிடி.தேவகௌடா என்பவர் உயர்கல்வித் துறை அமைச்சரானது குறித்த கேள்விக்கு பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. படித்த கல்வியாளர் ஒருவர் கல்வி அமைச்சரானால்தான் கல்வி முன்னேற்றம் ஆகும் என்று எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், 8 ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஜி.டி.தேவ கௌடாவிற்கு உயர்கல்வி அமைச்சர் பதவி வழங்கியது குறித்து முதலமைச்சர் குமாரசாமி விளக்கமளித்தபோது, ‘நான் என்ன படித்திருக்கிறேன்? ஆனால், முதலமைச்சராக இருக்கிறேன். அவர் உயர்கல்வி அமைச்சர் ஆக இருப்பதனால் என்ன? அவருக்கு நிதித்துறை கொடுக்க வேண்டுமா? குறிப்பிட்ட சில துறைகளுக்கு போட்டி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அது கட்சி எடுக்கும் முடிவு தான் என்று கூறினார்.

ஆக ஒரு அமைச்சர் பதவி என்பது போட்டிக்காக கொடுக்கப்படுகிறதே தவிர, ஒருவருடைய தரத்தை பார்த்து கொடுக்கப்படுவதில்லை என்று முதல்வரே தனது வாயால் ஒப்புக்கொண்டதாக சமூக வலைத்தள பயனாளிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்,.

Leave a Reply