ஜெயலலிதாவின் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவேன். பிரதமர் மோடி

17குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மக்களவையில் இன்று பேசிய பாரதபிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

மேலும் வரும் 2022ஆம் ஆண்டிற்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தவீடு, ஊழலற்ற நிர்வாகம், நாடு முழுவதும் 24 மணி நேரம் மின்சாரம், போன்றவைகளை செயல்படுத்துவதே தனது அரசின் நோக்கம் என்று கூறினார்.

நாட்டில் ஏழைகளின் வறுமையை விரட்ட பயன்படும் ஒரே ஆயுதம் கல்விதான். அந்த கல்வியை ஏழைகளுக்கு இலவசமாக அரசு கொடுத்தால், நாட்டில் ஏழைகளே இருக்கமாட்டார்கள். எனவே வறுமையை அகற்ற ஏழைகளின் கையில் கல்வி ஆயுதத்தை வழங்குவோம்.

குஜராத் மாநிலத்தை விட, தமிழக வளர்ச்சி மாடலே சிறந்தது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்தை மனதார வரவேற்கிறேன்.  ஆனால் ஒரே வளர்ச்சி மாடலை நாடு முழுமைக்கும் அமல்படுத்துவதில் சில சிரமங்கள் இருக்கின்றன. கேரளாவின் குடும்பஸ்ரீ திட்டமும், தமிழகத்தின் மழைநீர் சேகரிப்பு திட்டமும் மிகவும் சிறப்பான திட்டம். தமிழகத்தில் வெற்றிகரமாக உள்ள மழைநீர் சேகரிப்பு திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த விரும்புகிறேன்” என்று மேலும் பிரதமர்மோடி தெரிவித்தார்.

Leave a Reply