கிளிண்டன், ஹிலாரியை அடுத்து அரசியலில் களமிறங்கும் செல்சியா

கிளிண்டன், ஹிலாரியை அடுத்து அரசியலில் களமிறங்கும் செல்சியா

hillary-clinton-family-3இரண்டு முறை அமெரிக்க அதிபராக இருந்தவர் பில்கிளிண்டன். இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் நடந்த அதிபர்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இந்நிலையில் பில்கிளிண்டன், ஹிலாரியை அடுத்து இவர்களது மகள் செல்சியா தற்போது அரசியலில் குதிக்க உள்ளார்.

சமீபத்தில் முதுமை காரணமாக ஜனநாயக கட்சியை சேர்ந்த நீடாலோவி என்பவர் பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவ சபையில் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு விரைவில் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் பில்கிளிண்டன் – ஹிலாரி தம்பதியின் மகள் செல்சியா போட்டியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன

36 வயதான செல்சியா கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கவனித்து கொண்டு அரசியலிலும் குதிக்க உள்ளார். செல்சியா அரசியலில் குதிக்க வசதியாக சமீபத்தில் பில்கிளிண்டன் – ஹிலாரி தம்பதியினர் நியூயார்க்கில் 1.16 மில்லியன் மதிப்புள்ள புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply