தேர்தல் விவாதத்திற்கு பின் உறுதியானது ஹிலாரி வெற்றி.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர்களின் நேரடி விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விவாதத்திற்கு முன்னர் இருவரும் கைகுலுக்கி கொண்ட காட்சியின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள்தான் அமெரிக்காவின் ஹாட் டாக்
இந்த விவாதத்தில் ஹிலாரி கிளிண்டனின் அழுத்தமான பேச்சு, டிரம்பின் கேள்விகளுக்குரிய ஆணித்தரமான பதில் அனைவரையும் கவர்ந்தது. எனவே அடுத்த அமெரிக்க அதிபர் ஹிலாரிதான் என்றே அமெரிக்கர்கள் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த இந்த விவாதத்தில் நடந்த சில சுவாரஸ்ய காட்சிகள்:
1. இந்த விவாதம் 12 தொலைகாட்சி நெட்வொர்க்குகள் மூலமாக சுமார் 81 மில்லியன் பேர் இந்த விவாதத்தை கண்டுள்ளனர். இது தவிர ஆன்லைன் யூ-ட்யூப் சேனல்கள், பைரஸி தளங்கள் மூலமாகவும் இந்த விவாதம் வைரலானது. மொத்தமாக சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமாக இந்த விவாதம் பார்க்கப்பட்டுள்ளது. இது தான் இதுவரை நடைபெற்ற அமெரிக்க அதிபர் விவாதங்களில் மிக அதிகமாக பார்க்கப்பட்ட விவாதமாகும்.
2. சமூக வலைதளங்களில் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக ட்ரம்ப்பை குறிப்பிட்டு 30000 பதிவுகளும், ஹிலரியை குறிப்பிட்டு 24000 பதிவுகளும் பதிவாகியுள்ளது.
3. அதிகம் ட்விட் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதமும் இது தான். மொத்தமாக 35 லட்சத்துக்கும் அதிகமான முறை டரம்ப் மற்றும் ஹிலரியை குறிபிட்டு ட்விட் செய்யப்பட்டுள்ளன.
4. ட்விட்டரில் இவர்கள் பெயர் குறிப்பிட்ட ட்விட்கள் மொத்தம் 170 கோடி பேரின் டைம்லைனில் பார்க்கப்பட்டுள்ளது.
5. ஹிலரியின் பெயரை குறிப்பிட்டு 1.2 மில்லியன் ட்விட்டுகளும், ட்ரம்ப் பெயரை குறிப்பிட்டு 1.8 மில்லியன் ட்விட்டுகளும் பதிவாகின. ட்ரம்ப் குறித்த மீம்ஸ்கள் அதிகம் பரவின என்பதும் குறிப்பிடத்தக்கது.