வடகொரியாவுடன் சமரசம் வேண்டாம்: டிரம்புக்கு ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை

வடகொரியாவுடன் சமரசம் வேண்டாம்: டிரம்புக்கு ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை

வடகொரியாவுடன் அமெரிக்கா கடந்த சில மாதங்களுக்கு முன் பயங்கரமாக முட்டி மோதிக்கொண்டிருந்த நிலையில் தற்போது நிலைமை மாறி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளன. வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் வரும் மே மாதம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்

இந்த நிலையில் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிவரும் வடகொரியாவுடன் சமாதானம் பேச நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சி ஆபத்தில் முடியும் என ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.

மும்பையில் இந்தியாடுடே கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹிலாரி கிளிண்டன் இதுகுறித்து மேலும் கூறியதாவது: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அனுபவம் வாய்ந்த பல உயரதிகாரிகள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ராஜதந்திர அணுகுமுறைகளை அறிந்த மூத்த அதிகாரிகள் யாரும் இல்லாமல் ராஜதந்திர முறையின் மூலம் வடகொரியாவுடன் சமாதானம் காண நினைக்கும் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கை ஆபத்தில் முடியும்.

அணு ஆயுதங்கள் தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னுடன் அமர்ந்து பேச வேண்டுமானால் அதற்கு நன்றாக விபரம் தெரிந்த, ராஜ தந்திர முறைகளை நன்கறிந்த மூத்த அதிகாரிகள் மிகவும் அவசியம் என்றும் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.

Leave a Reply