ஐ.எஸ்.அமைப்பை நிறுவியரே ஹிலாரிதான். டொனால்ட் அதிர்ச்சி குற்றச்சாட்டு

ஐ.எஸ்.அமைப்பை நிறுவியரே ஹிலாரிதான். டொனால்ட் அதிர்ச்சி குற்றச்சாட்டு

donaldஅமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்க நெருங்க ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்ப்பும் மிக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹிலாரியின் தேர்தல் பிரச்சாரத்தை விட டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சாரத்தில் அனல் பறக்கின்றது. அவர் தினந்தோறும் ஹிலாரி மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றார்.

இந்நிலையில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவர் ஹிலாரி என்று திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு டொனால்டின் குடியரசு கட்சியினர்களே கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் டிரம்ப் கூறியது இதுதான்: “ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர். இதற்காக ஐஎஸ் அமைப்பினர் ஹிலாரிக்கு விருது வழங்க வேண்டும்.

ஒர்லாண்டோ, சான் பெர்நார்டினோ சம்பவங்களை நினைவு கூருங்கள், உலக வர்த்தக மையத்தில் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். இச்சம்பவங்கள்தான் ஐஎஸ் அமைப்பு நுழைய வழிவகுத்தது. ஐஎஸ் அமைப்பு உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருவதற்கான காரணமும் இதுவே.

உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது நான் அமெரிக்காவின் அதிபராக இருந்திருந்தால் அந்த தாக்குதல் நடைபெறாமல் தடுத்து நிறுத்தியிருப்பேன். ஏனெனில் அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவில் இருந்திருக்கவே மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply