கண்ணையகுமார் பி.எச்.டி டாக்டரா? மருத்துவ டாக்டரா? இந்து அமைப்பின் தலைவர் குழப்பம்

பி.எச்.டி டாக்டர் நோயாளிகளை பார்ப்பாரா?  இந்து அமைப்பின் தலைவர் குழப்பம்

kannaiyaஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் அரசியல் சர்ச்சைகள் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல், இந்து அமைப்பான வீர்சேனாவின் நிரஞ்சன் பால் என்பவர், கண்ணையா குமார் போன்றவர்கள் டாக்டர் ஆனால் நோயாளிகளை எப்படி நடத்துவார்” என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

‘கண்ணய்யாகுமார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி செய்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் தேசத்தை துண்டாட அச்சுறுத்தி வருகிறார். இப்படிப்பட்டவர் டாக்டர் ஆனால் அவரை அணுகும் நோயாளிகளுக்கு அவர் எவ்வாறு சேவையாற்ற முடியும்?” என்று கூறியுள்ளார். கண்ணையா மருத்துவம் படிக்கவில்லை என்றும் பி.எச்.டி டாக்டர் பட்டத்திற்கான படிப்பு படிக்கின்றார் என்று நிரஞ்சன் பாலிடம் சுட்டிக்காட்டிய பிறகும் கூட அவருக்கு புரியவில்லை..

அவர் மேலும், “அதனால் என்ன? அவர் எப்படியிருந்தாலும் டாக்டர் ஆகப்போகிறார், நோயாளிகள் அவரை அணுகவே செய்வர்” என்று திரும்பவும் சொன்னதையே கூறினார். வீர்சேனா என்ற வலதுசாரி அமைப்பு, நாளை கண்ணய்யா குமார் மும்பையில் ஆற்றவிருக்கும் உரையை தடுக்கப்போவதாக சூளுரைத்துள்ளனர்.

இந்து கோவன்ஷ் ரக்‌ஷா சமிதி அமைப்பைச் சேர்ந்த வைபவ் ராவுத், “கண்ணய்யா குமாரை மும்பையில் நுழைய அனுமதிக்கக் கூடாது, அவர் நகரத்தை பாழ்படுத்தி விடுவார், எங்களைப் பொறுத்தவரை அவர் இந்தியாவில் இருக்க அனுமதிக்கப் படக்கூடாது” என்று கூறினார்.

Leave a Reply