ரஜினிக்கு எதிரான பிச்சை எடுக்கும் போராட்டம். இந்து மகாசபா ஆதரவு.

rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்திற்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என விநியோகிஸ்தர்கள் போராடி வரும் நிலையில் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஒருசில அரசியல் கட்சிகளும் வேறு சில அமைப்புகளும் ஆதரவு தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்து மகாசபை இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு தரவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் தமிழர்களை யார் வஞ்சித்தாலும் அதனை எங்கள் அமைப்பு எதிர்க்கும் என்றும் 500 திரையரங்கு உரிமையாளர்களையும் 9 விநியோகிஸ்தர்களையும் காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதாலும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் தங்கள் அமைப்பினர் குடும்பத்துடன் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இந்த போராட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லிங்கா நஷ்ட ஈடு குறித்து சம்பந்தப்பட்ட சங்கங்களின் மூலம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும், அரசியல் கட்சிகளை இந்த விவகாரத்தில் இழுப்பது தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply