அபுதாபியில் இந்து கோவில். ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு பிரதமர் மோடி நன்றி
[carousel ids=”69993,69994,69995,69996,69997,69998,69999,70000,70001,70002″]
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த வெளிநாட்டு பயணமான அபுதாபிக்கு நேற்று சென்றடைந்தார். அங்குள்ள ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகை தந்த மோடி, பின்னர் அங்குள்ள ஷேக் ஸயீத் கிராட் மசூதிக்கு சென்று அங்கு பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் மசூதியில் வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவாளர் புத்தகத்தில் கையெழுத்திட்ட பிரதமர், மசூதிக்கு தன்னுடன் வந்த ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அடுத்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் ஐசிஏடி குடியிருப்பு நகரத்துக்கு வந்த மோடி, அங்கு குறிப்பிட்ட சில இந்திய தொழிலாளர்கள் குழுவினருடன் கலந்துரையாடினார்.
மேலும் அபுதாபியில் இந்து கோயில் கட்டுவதற்கு நிலம் ஒதுக்க ஐக்கிய அரபு அமீரக அரசு எடுத்த முடிவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார். துபாயில் ஏற்கெனவே சிவன் கோயிலும், கிருஷ்ணர் கோயிலும் இருக்கும் நிலையில் இதுவரை எந்த இந்து கோவில்களும் இல்லாத அபுதாபியில் இந்து கோயில் ஒன்று கட்டப்படவிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் 26 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இது அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.