இந்திய தொழிலதிபரின் கைக்கு வந்துள்ள வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய போர் அலுவலகம்

இந்திய தொழிலதிபரின் கைக்கு வந்துள்ள வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய போர் அலுவலகம்
building-bccl
உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்துள்ள இந்திய தொழிலதிபர்களான ஹிந்துஜா சகோதரர்கள் லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் ஒன்றை முறைப்படி விலைக்கு வாங்கியுள்ளனர். இந்த கட்டிடத்தை முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலகப்போரின்போது அலுவலகமாக பயன்படுத்தி வந்த கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த கட்டிடம் ஏழு மாடிகளுடன் 5.80 லட்சம் பரப்பளவுடன் கம்பீரமாக உள்ளது. இந்த கட்டிடத்தை ஹிந்துஜா சகோதரர்கள் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தங்களது பங்குதாரர்களுடன் இணைந்து வாங்கியுள்ளனர். இருப்பினும் எவ்வளவு தொகைக்கு இந்த கட்டிடம் விற்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை

இந்த கட்டிடத்தின் சாவி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரிட்டனுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்த திட்டத்துக்கு நிதியுதவி வழங்கிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரி சஞ்சீவ் சத்தா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு ஃபைவ் ஸ்டார் ஓட்டலாக மாற்றப்படவிருப்பதாகவும், அதே நேரத்தில் இந்த கட்டிடத்தின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்றும் என்று ஹிந்துஜா சகோதரர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply