பத்திரிகையாளர் கெளரிலங்கேஷ் கொலை வழக்கில் பெங்களூரில் ஒருவர் கைது
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் அவருடைய வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் போலீசார் நேற்று பெங்களூரை சேர்ந்த நவீன் என்பவரை கைது செய்துள்ளனனர்
வலதுசாரி கருத்துக்களை கொண்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், பத்ரிகே என்ற பத்திரியை நடத்தி வந்தார். இந்த நிலையில் இவரது படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையில் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் 3 வரைபடங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஹிந்து ஜகரன வேதிகே என்ற அமைப்பைச் சேர்ந்த நவீன் என்பவரை பெங்களூரில் கைது செய்துள்ளனர். அவர் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் மதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.