போப்பாண்டவரை கடத்த ஹிட்லர் திட்டமிட்டாரா? புதிய ஆதாரம் வெளியானதால் பரபரப்பு

போப்பாண்டவரை கடத்த ஹிட்லர் திட்டமிட்டாரா? புதிய ஆதாரம் வெளியானதால் பரபரப்பு

hitlerஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கிய ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின்போது அப்போதைய போப்பாண்டவரை கடத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளிவந்த ஆதாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளை அச்சுறுத்திய ஹிட்லர், போப்பாண்டவரையும் அச்சுறுத்தியுள்ளார் என்பது தெரிகிறது.

2ஆம் உலகப்போர் காலத்தில் 12-ம் பிளஸ் வாடிகனில் போப் ஆண்டவராக இருந்தார். அவரை அங்கிருந்து ஜெர்மனிக்கு கடத்த ஹிட்லர் திட்டமிட்டிருந்ததாக சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை வாடிகன் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குனரின் மகன் அன்டோனியோ நெலிகாரோ எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் ஒரு கடிதத்தை அவர் ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் ‘உங்களையும், உங்களது படைகள் மற்றும் வாடிகன் நகரை கைப்பற்றுவேன். ஆவணங்கள் கலைப் பொக்கிஷங்கள் மற்றும் உங்களையும் (போப் ஆண்டவரையும்) ஜெர்மனிக்கு கடத்தி செல்வேன்’ என எழுதியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திட்டமிட்டபடி போப்பாண்டவரை ஹிட்லர் கடத்தவில்லை. எதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது என்பது தெரியவில்லை.

Hitler planned to kidnap pope from VAtican

Leave a Reply