உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் பாரம்பரிய மருந்துப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டுவரும் தேனீக்களின் நஞ்சானது HIV/AIDS உயிர்க்கொல்லி நோயினையும் குணப்படுத்தவல்லது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சென்.லூசியசில் அமைந்துள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு ஆராய்ச்சியாளர்களினாலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது HIV நோயினை பரப்பக்கூடிய அல்லது ஏற்படுத்தக்கூடிய வைரஸினை முற்றாக அழிக்கும் ஆற்றல் தேனீக்களின் நஞ்சில் காணப்படுகின்றமை குறித்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.