எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிப்பு: என்னதான் நடக்குது?
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு வரும் திங்கள் முதல் விடுமுறை என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 ஆம் தேதி முதல் 31ம் ஆம் தேதி வரை விடுமுறை என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது.
ஆனால் தற்போது எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை தான் என்றும், முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும், எல்கேஜி, யூகேஜிக்கு விடுமுறை நிறுத்திவைப்பு குறித்த கேள்விக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்