கணவரை பிரிகிறார் ஏஞ்சலினா ஜோலி. விவாகரத்து வழக்கில் கையெழுத்து
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பதாக அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் உடன் வாழ்ந்து வந்த ஏஞ்சலினா ஜோலி பத்து ஆண்டுகள் கழித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஜானி லீ மில்லர் மற்றும் பில்லி பாப் தோன்டான் ஆகியோர்களை ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து செய்தவர் என்பதும் அதேபோல் பிராட்பிட்டும் முதல் மனைவி ஜெனிபரை விவாகரத்து செய்துவிட்டு ஏஞ்சலினாவை திருமணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கணவர் பிராட்பிட்டுடன் ஒத்துப்போக முடியாத அளவிற்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும், செப்டம்பர் 15-ம் தேதி முதல் பிரிந்து வாழ்வதாகவும் ஏஞ்சலினா தனது விவாகரத்து வழக்கு மனுவில் கூறியிருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும் கணவரின் செயல்பாடுகளால் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், அதேசமயம் அவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.