ஈரோடு மாவட்ட ஊர்க்காவல்படை பெண்கள் படைபிரிவில் காலியாக உள்ள ஊர்க்காவல் பதவிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 50 வயதுக்குள்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், நல்ல நடத்தையும், உடற்திறனும் கொண்டவராக இருக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
இந்த தகுதியுள்ள பெண்கள் ஈரோடு மாவட்ட ஊர்க்காவல்படை பெண்கள் படைபிரிவில் பணியாற்ற தங்களை பற்றிய முழு விபரங்களை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை மண்டல தளபதி, ஊர்க்காவல்படை, ஈரோடு மாவட்டம், ஈரோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்பான விபரங்களுக்கு ஊர்க்காவல்படை அலுவலகத்தை அணுக மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.