பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுங்கள். இந்திய ராணுவத்திற்கு உள்துறை அமைச்சர் உத்தரவு

rajnath singhஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுங்கள் என்று எல்லைப் பாதுகாப்பு படைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தானிடையே கடந்த 2003ஆம் ஆண்டு இரு நாட்டு அரசாங்கள் ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்ததை  மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடிஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை மீது அதிஅடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதோடு இந்தியாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
 
இந்நிலையில், இந்திய எல்லை விவகாரம் குறித்து ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் படையின் இயக்குநர் டி.கே.பாட்நாயக்குடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை செய்தார்.

அப்போது பாட்நாயக், இந்திய பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழ்நிலை, ஜம்முவில் கிராமங்கள் மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல் போன்ற பிரச்னைகள் பற்றி உள்துறாஇ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விரிவாக கூறியிருக்கிறார். மேலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, இந்திய வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்துமாறு எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் டி.கே.பாட்நாயக்கிற்கு அனுமதி கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply