இந்திய எல்லையில் சீனா சாலை அமைத்தால் தகர்த்து எறிவோம். ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

rajnath singhஇந்திய சீன எல்லைப்பகுதியில் சீனா சாலை அமைத்தால் அந்த சாலையை தகர்த்து எறிவோம் என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங் பேசியதாவது:

சீனாவுடன் தொடர்ந்து நல்லுறவில் இருக்கவே இந்தியா  எப்போதும் விரும்புகிறது. நம்முடைய உணர்வுக்கு சீனா மதிப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக, இந்திய பகுதிக்குள் ஊடுருவுவதையும் சாலை அமைக்கும் திட்டத்தையும் சீனா கைவிட வேண்டும். அதையும் மீறி இந்திய பகுதிக்குள் சாலை கட்டுமானப் பணியை மேற்கொண்டால் அந்த சாலையை தகர்த்து எறியவும் இந்தியா தயங்காது.

இந்திய உள்துறை அமைச்சரின் எச்சரிக்கையை அடுத்து சீனா கடும் கோபம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவுக்கு உட்பட்ட பகுதிக்குள் சாலை அமைக்கும் பணியில் தாங்கள் ஈடுபடுவதாகவும், அதை தடுத்து நிறுத்தும் உரிமையோ அல்லது வலிமையோ எந்த நாட்டிற்கும் இல்லை என்றும் சீன ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply