நேபாளத்தில் நாளை சார்க் மாநாடு. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.

ranjnath
சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நாளை நேபாளத்தில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை காத்மண்டு பயணமாகிறார்.

உள்துறை அமைச்சர் நிலையிலான 6ஆவது சார்க் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை நேபாள தலைநகர் காத்மண்ட் நகரில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நேபாளத்துக்கு செல்கிறார்.

இந்த மாநாட்டில், எல்லை தாண்டிய பயங்கரவாதம், சார்க் நாடுகளில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களின் உள்கட்டமைப்பு கட்டுப்படுத்துவது, சார்க நாடுகளிடையே உள்ள கடல் எல்லைகளின் பாதுகாப்பு, போதை மருந்து கடத்தல், இணைய குற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் விவாதிக்க உள்ளனர்.

இந்த மாநாடு முடிந்தவுடன் நேபாள அதிபர் ராம் பரன் யாதவ், பிரதமர் சுஷில் கொய்ராலா, அந்நாட்டு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோரையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலிகான் கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக அந்நாட்டு உள்துறை செயலாளர் ஷாகித் கான் கலந்து கொள்வார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

Leave a Reply